ஃபோரம் மாலில் வெளியிடப்படும் ‘திருட்டுப்பயலே 2’ இசை

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (18:16 IST)
‘திருட்டுப்பயலே 2’ படத்தின் இசை, சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் வெளியிடப்பட இருக்கிறது.
 



ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா நடிப்பில் வெளியான படம் ‘திருட்டுப்பயலே’. 2006ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, சுசி கணேசன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. முதல் பாகத்தின் மூலம் தயாரிப்பில் காலடி எடுத்து வைத்த ஏ.ஜி.எஸ். நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது.

பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் செப்டம்பர் 1ஆம் தேதி மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெற இருக்கிறது. வித்யாசாகரின் ஆர்மோனிய கச்சேரியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்