‘துருவ நட்சத்திரம்’, ‘ஸ்கெட்ச்’ படங்களைத் தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் படம் ‘சாமி 2’. ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா மட்டுமில்லாமல், கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில், வில்லனாக நடிக்கிறார் பாபி சிம்ஹா.
“கோட்டா சீனிவாச ராவ் நடித்த பெருமாள் பிச்சை கேரக்டரில் நடிக்கிறார் பாபி சிம்ஹா. அவர், சாதாரண வில்லன் கிடையாது. பெருமாள் பிச்சையைப் போல் 10 மடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சொல்லப்போனால், விக்ரமுக்கு இணையாக பாபி சிம்ஹா கேரக்டரும் இருக்கும்” என்கிறார் ஹரி. முதல் பாகத்தைப் போல் மொத்த படத்தையும் திருநெல்வேலியிலேயே எடுக்காமல், முக்கியமான காட்சிகளை மட்டும் அங்கு எடுக்கப் போகிறார்களாம்.