தியாகராஜன் குமாரராஜா படத்தில் பெண் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

திங்கள், 7 நவம்பர் 2016 (11:01 IST)
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விரைவில் மலையாள நடிகர் பகத் பாசில் இவர்களுடன் இணைவார் என கூறப்படுகிறது. நாயகி சமந்தா.
 
 
இந்தப் படத்தின் படப்பிடிப்புதள காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் உள்ளார். படம் முழுக்க அவர் பெண் வேடத்தில் வருகிறாரா இல்லை ஒரு காட்சியில் மட்டுமா என்பது தெரியவில்லை. 
 
பி.சி.ஸ்ரீராம் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்