வலிமை படத்தில் பாடல் எழுதியுள்ள அறிவு!

புதன், 21 ஜூலை 2021 (10:29 IST)
வலிமை படத்தில் தெருக்குரல் அறிவு ஒரு பாடலை எழுதியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதை முடித்து மற்ற பணிகளை முடித்து விட்டு ஆயுதப் பூஜை பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கூடிய விரைவில் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தின் அறிமுகப்பாடல் மற்றும் ஒரு தாய் செண்ட்டிமெண்ட் பாடல் ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாம். அதில் ஒரு பாடலை தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் தெருக்குரல் அறிவு கும்தா எனத் தொடங்கும் பாடலை எழுதியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்