சிபி நடித்திருக்கும் கட்டப்பாவை காணோம் முடிந்து, ரிலீஸ் தேதி எங்கப்பா காணோம் என்று காத்திருக்கிறது. சைத்தான் பட இயக்குனரின் இயக்கத்தில் சிபி நடித்திருக்கும், சத்யா படமும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தெகிடி படத்தை இயக்கியவரின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
அசோக் செல்வன், ஜனனி நடித்த தெகிடி படம் அதன் மேக்கிங்கிற்காகவும், திரைக்கதைக்காகவும் பேசப்பட்டது. அதனை இயக்கிய ரமேஷ், நீண்ட நாள்கள் எடுத்து அடுத்த ஸ்கிரிப்டை எழுதியுள்ளார். சிபியிடம் படத்தின் கதையை சொன்னதும் அவர் உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.