இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு !

சனி, 10 ஜூலை 2021 (16:47 IST)
இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை- இந்தியா அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 13 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.

இந்நிலையில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஜூலை 13 ஆம்தேதி தொடங்கவிருந்த கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை 18 ஆம் தேதி தொங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெய்ஷா கூறியுள்ளதாவது:

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதால், வரும் ஜூலை 13 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 18  ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்