ஜெய்பீம் போல இன்னும் பல படங்கள் வரும் – சூர்யாவுக்கு பா.ரஞ்சித் வாழ்த்து

செவ்வாய், 2 நவம்பர் 2021 (10:31 IST)
சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் தலைப்பு முன்பாக பா.ரஞ்சித்திடம் இருந்ததாகவும், சூர்யா கேட்டதும் அதை அவர் தாராளமாக தந்ததாகவும் சூர்யா கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஜெய்பீம் படம் குறித்து பதிவிட்டுள்ள பா.ரஞ்சித் “சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.அது நம் தலைமுறையை மாற்றும்.ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த சூர்யாவுக்கும், படக்குழுவினருக்கும் பெரும் நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்