100% இல்லைனா மாஸ்டர் மட்டும்தான்; ஈஸ்வரனுக்கு ஆப்பு! – கலக்கத்தில் ரசிகர்கள்!

வியாழன், 7 ஜனவரி 2021 (12:17 IST)
தமிழக திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் மாஸ்டர் மட்டுமே வெளியாகும் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் நீங்காத நிலையில் மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கல் வெளியாவதால் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதனால் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் அரசின் உத்தரவை திரும்ப பெற கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ”100% சதவீதம் பார்வையாளர்களுக்கான அனுமதி திரும்ப பெறப்பட்டால் மாஸ்டர் படம் மட்டுமே திரையிடப்படும். மாஸ்டர் படம் வெளியிடப்படவில்லை என்றால் மட்டுமே ஈஸ்வரன் படத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என கூறியுள்ளார். இதனால் நீதிமன்ற உத்தரவை எதிர்நோக்கி ஈஸ்வரன் ரசிகர்கள் பீதியுடன் காத்துள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்