கங்குவா எனக்காக எழுதின கதை..! வீடியோவில் வந்து பேசிய ரஜினி!

Prasanth Karthick

ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (10:21 IST)

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலமாக வந்து வாழ்த்து கூறியுள்ளார்.

 

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாராகியுள்ள படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் நவம்பர் 14ம் தேதி அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகிறது.

 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்துக் கொள்ளாவிட்டாலும் வீடியோ மூலமாக வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் “அண்ணாத்த படம் பண்ணியபோதே சிவா என்னிடம் ‘ஒரு பீரியாடிக்கல் கதை இருக்கு. அதை நீங்க பண்ணனும்னு ஆசைப்படுறேன்’னு சொன்னார். அதுதான் கங்குவா. ஒருவகையில அது நான் பண்ணியிருக்க வேண்டிய படம். அப்படியே சில மாற்றங்கள் பண்ணப்பட்டு இன்னைக்கு சூர்யா படமா வந்திருக்கு. படம் வெற்றிபெற வாழ்த்துகள்” என பேசியுள்ளார்.

 

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ரஜினிகாந்தை குறிப்பிட்டு தனியாக தனது நன்றியை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்