ஒரு வருடத்துக்குப் பின்னர் மாஸ் நடிகர் ஒருவரின் படம் ரிலீஸாகியுள்ள நிலையில் மீண்டும் இப்போது கேரளாவில் ரசிகர்கள் சினிமா திரையரங்குகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர். படத்தின் மீதான பாஸிட்டிவ் விமர்சனங்களும் ரசிகர்களை இழுக்க ஆரம்பித்துள்ளன. தமிழுக்கு மாஸ்டர் திரைப்படம் அமைந்ததைப் போல மலையாள சினிமாவுக்கு தி பிரைஸ்ட் திரைப்படம் அமையும் என சொல்லப்படுகிறது.