தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துவரும் திரைப்பம் பொன்னியில் செல்வன். அமரர் கல்கியின் நாவலைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி.