தியேட்டர் உரிமையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ''மாஸ்டர்'' பட தயாரிப்பாளர்
வெள்ளி, 29 ஜனவரி 2021 (18:13 IST)
மாஸ்டர் படத்தை தியேட்டர் தியேட்டரில் வெளியிட்டு தியேட்டர் கலாச்சாரத்துக்கு புத்துயிரூட்டினார் விஜய். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கடந்த 2020 ஏப்ரல் மாதம் ரிலீஸாகியிருக்க வேண்டிய மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி பெரும் வெற்றிப் பெற்றது.
இப்படத்தின் வசூல் உலகளவில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. ரூ.200 கோடி கிளப்பில் விஜய்யின் மாஸ்டர் இணைந்துள்ளது.
இந்நிலையில், மற்ற ஹீரோக்களும் விஜய்யைப் பின்பற்றி தங்களின் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு மாஸ்டர் படம் ரிலீஸானாலும் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் மொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
மீண்டும் விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்து இன்னொரு பிரமாண்ட படம் உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதற்குத்தான் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
மேலும் , இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் அனைவரும் பார்ப்பதற்காக மாஸ்டர் படம் ஒடிடியில் ரிலீஸாகவுள்ளதாக விஜய் கூறியிருந்தார் இப்படத்தை ரசிகர்கள் ஒடிடியில் பார்த்துக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் மாஸ்டர் தயாரிப்பாளர் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதாவது, மாஸ்டர் படம் தியேட்டர்களில் ரிலீஸாகி 15 நாட்களே ஆனநிலையில் நேற்று அமேசான் ஒடிடியில் ரிலீசானது. இதனால் தங்களி வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில்,மாஸ்டர் படத்தின் 3 வது வார திரைப்பட வசூலை தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் பிரித்து வைத்துக்கொள்ளலாம் என மாஸ்டர் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் வசூலை தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்