கபடதாரி படத்தை வெளியிட பயமாக இருந்தது.. சிபிராஜ் கருத்து

வெள்ளி, 29 ஜனவரி 2021 (18:00 IST)
சிபிராஜ் நடித்துள்ள கபடதாரி திரைப்படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

நடிகர் சிபிராஜ் நடித்து வந்த ’கபடதாரி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் தயாரித்துள்ளார். இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இதையடுத்து இந்த படம் ஜனவரி 28 ஆம் தேதி நேற்று ரிலீஸானது. ரிலீஸானது முதல் பாஸிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸானதால் இந்த படத்துக்கு கூடுதல் பார்வையாளர்கள் கிடைத்து வருகின்றனர்.

இந்நிலையில் படம் பார்த்து பின்னர் பேசியுள்ள சிபிராஜ் ’50 சதவீத இருக்கைகள் மற்றும் மாஸ்டர் படம் வெளியான நேரம் ஆகியவற்றால் கபடதாரி படத்தை ரிலீஸ் செய்ய கொஞ்சம் பயமாகதான் இருந்தது’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்