தி லெஜண்ட் படத்தின் இந்தி ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

சனி, 16 ஜூலை 2022 (15:04 IST)
தி லெஜண்ட் திரைப்படம் இந்தியா முழுவதும் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாக உள்ளது.

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் தி லெஜன்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் இந்தி ரிலீஸ் உரிமையை பிரபல வினியோகஸ்தரான நம்பி ராஜனின் கணேஷ் பிலிம்ஸ் கைப்பற்றி உள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்