கிராபிக்ஸ் அவதாரத்தில் பாகுபலி 2!!

செவ்வாய், 15 நவம்பர் 2016 (18:00 IST)
இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மிகப் பிரம்மாண்டமான படம் பாகுபலி. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்தியா மட்டுமில்லாது உலக நாடுகளிலும் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பாகுபலி 2' திரைப்படத்தின் கிராஃபிக் நாவல் வெளியிடப்பட்டுள்ளது.

 
பாகுபலி படத்தில் 'கட்டப்பா ஏன் பாகுபலி'யை கொன்றார்?' எனும் கேள்விக்கு விடை என்ன என்பதை காண காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்ப்பர்ப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாக படக்குழுவினர், 'பாகுபலி 2' குறித்து ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
சமீபத்தில், பாகுபலி படப்பிடிப்பு களத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை விர்சுவல் ரியாலிட்டி வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது 'பாகுபலி' கிராக்பிக்ஸ் நாவலை பாகுபலி - வீரத்தின் போர்க்களம் (Baahubali-The Battle of the Bold) எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.
 
இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களான சிவகாமி, கட்டப்பா, பல்லால தேவா மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர். இந்த கிராஃபிக் நாவலின் முன்னோட்ட பதிவில், கிராஃபிக்ஸ் உலகில் தலைச்சிறந்த படைப்பான 'பாகுபலி'யின் பங்கு குறித்து கூறப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்