மீனா கணவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி!

புதன், 29 ஜூன் 2022 (15:04 IST)
மீனா கணவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி!
நடிகை மீனாவின் கணவர் நேற்று உயிரிழந்த நிலையில் அவரது இறுதி ஊர்வலம் சற்றுமுன் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் இன்று மாலை வித்யாசாகர் உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சற்று முன்னர் வித்யாசாகரின் இறுதி ஊர்வலம் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியதாகவும் பெசன்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக இந்த இறுதி ஊர்வலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று உள்ளதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்