ஒரு மாதத்திற்கு படத்தை வெளியிட முடியாது! வீர தீர சூரனுக்கு தடை! - அதிர்ச்சியில் தியேட்டர்கள், ரசிகர்கள்!

Prasanth Karthick

வியாழன், 27 மார்ச் 2025 (13:14 IST)

விக்ரம் நடித்து இன்று வெளியாகவிருந்த வீரதீர சூரன் படத்தை ஒரு மாத காலத்திற்கு ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து தயாரான படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு பங்குதாரரான B4U நிறுவனம் படத்தை வெளியிட தடைக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

ஓடிடி உரிமம் விற்கப்படும் முன்னரே ரிலீஸ் தேதியை வெளியிட்டதாக அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்தை இன்று காலை 11.30 வரை வெளியிட தடை விதித்த நீதிமன்றம், 7 கோடி டெபாசிட் செலுத்தவும், 48 மணி நேரத்திற்கு ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில் தற்போது வீர தீர சூரன் படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது டெல்லி நீதிமன்றம்.

 

இன்று படம் வெளியாகும் என தியேட்டர்கள் அறிவித்து டிக்கெட்டுகளை விற்பனை செய்திருந்த நிலையில், ரசிகர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தீர்ப்புக்காக காத்திருந்த நிலையில் படம் தடை செய்யப்பட்டுள்ளது பேரிடி செய்தியாக அமைந்துள்ளது. இந்த படத்தை நம்பி வேறு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாத சூழலில் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்