தன் வாயால் சோனுசூட்டின் ஓவியம் வரைந்த ரசிகர்..வைரல் வீடியோ

சனி, 15 மே 2021 (19:49 IST)
சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர் தன் வாயால் தூரிகையைக் கவ்வியபடி சோனுசூட்டின் முகத்தை ஓவியமாக வரைந்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது, புலம்பெயர் மக்கள், தொழிலாலர்கள்,வெளிநாட்டு மாணவர்கள், விவசாயிகள் , ஏழைகள், ஆகியோருக்கு பெரிதும் உதவியர் சோனு சூட்.

 
சமீபத்தில் கொரொனா நோயாளிகள் 22 பேர் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டுமெனக் கேட்டு இரவில் நடிகர் சோனு சூட்டிற்கு ஒரு கால் வந்துள்ளது. உடனே இதுகுறித்து உண்மை நிலவரத்தைக் கேட்டு உண்மைதான் என்ப்தை உறுதி செய்துவிட்டு, உடனே இரவு என்று பாராது தனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சரி செய்யக் கொடுத்து,22 பேரின் உயிரைக் காப்பாற்றினார். இது நாடு முழுவதும் பேசு பொருளானது.

சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர் தன் வாயால் தூரிகையைக் கவ்வியபடி சோனுசூட்டின் முகத்தை ஓவியமாக வரைந்துள்ளார்.

இந்நிலையில் சென்னை கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ரெம்டெசிவர் மருந்து தேவை என நடிகர் சோனு சூட்டிற்கு டேக் செய்து கேட்டுள்ளார்.

எனவே ஹர்பஜன் சிங் அவருக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல்  நடிகர் சோனுச் சூட்டைத் தேதி யாராவது உதவி கேட்டால் தினமும் உதவி செய்து வருகிறார். இதனால் இவருக்கு நாள்தோறும் ரசிகர்கள் வட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர் தன் வாயால் தூரிகையைக் கவ்வியபடி சோனுசூட்டின் முகத்தை ஓவியமாக வரைந்துள்ளார். அதுவும் தலைகீழாக இந்த ஓவியம் குறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஓவியருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Sir @SonuSood
You are the one who have inspired many like me with your selfless work,helping thousands of people.
I'm one such admire,paying tribute to you with this beautiful painting.I would like to meet you and present this to you sir❤#sonusood #SonuSoodRealHero #SonuSood pic.twitter.com/NNS9v9cwZa

— Artist Yaswanth (@YaswanthArtist) May 14, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்