விஜய் மீது வழக்குப் பதிவு செய்தது சரிதான்: சீமான் பேட்டி

திங்கள், 19 நவம்பர் 2018 (12:23 IST)
சர்கார் பட போஸ்டரில் புகைப்பிடிப்பது போன்று தோன்றியதுக்காக நடிகர் விஜய் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்தது சரியானதுதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
 நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் கொண்ட சர்கார் பட போஸ்டர்கள் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.
 
இந்த புகைப்படம் சமூகத்தில் தீய பழக்கங்களை ஊக்குவிப்பதாக கூறி  கேரள அரசு நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது. 
 
கேரள அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக  சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 
 
வ.உ.சிதம்பரனாரின் 82-வது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், "கேரள அரசு, விஜய் மீது வழக்குப் பதிவு செய்தது சரிதான். இதை உணர்ந்து தம்பி விஜய் மட்டுமல்ல மற்ற நடிகர்களும் இதுபோன்ற காட்சிகளைத் தவிர்க்க வேண்டும். இதற்கெல்லாம் முன்மாதிரியாக நமக்கு எம்.ஜி.ஆர். இருந்திருக்கிறார். எனவே இதை பின்பற்ற வேண்டும் என்று அக்கறையோடு சொல்கிறேன்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்