ஒரே நாளில் கர்நாடக பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த 2.0 - இத்தனை கோடி வசூலா!

வெள்ளி, 30 நவம்பர் 2018 (12:40 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் நேற்று 10,000 திரையரங்கில் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
பாலிவுட் பிரபலம் அக்ஷ்ய் குமாரின் வருகை தமிழ் சினிமாவிற்கு ஒரு விருந்தாக அமைந்துவிட்டது அவரின் அபார நடிப்பால் தமிழகத்தில் அக்ஷ்ய் குமாருக்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து விட்டது.
 
இந்நிலையில் 2.0 படம் கர்நாடகாவில் முதல் நாளே ரூ 8.5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இதன் மூலம் தமிழ் படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படமாக 2.0 இடம்பெற்றுள்ளது.
 
மேலும், கர்நாடகாவில் இதற்கு முன் தமிழ் படங்களில் முதல் நாள் வசூலில் கபாலி தான் அதிகம், அப்படம் ரூ 7.5 கோடி வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்