ஜிவி பிரகாஷின் ‘செல்பி’ அப்டேட் தந்த தயாரிப்பாளர் தாணு!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:43 IST)
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் செல்ஃபி என்ற திரைப்படத்தின் அப்டேட்டை அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார் 
 
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் கௌதம் மேனன், வர்ஷா பொம்மலா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் செல்பி
 
மதிமாறன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என்றும் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இந்த பாடலை வெளியிடுவார் என்றும் கலைப்புலி எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்