தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் இந்த பாலிவுட் நடிகர்தானா? லேட்டஸ்ட் தகவல்!

vinoth

வெள்ளி, 24 மே 2024 (07:14 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம்.

இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது பேன் இந்தியா கலாச்சாரம் ட்ரண்டிங்கில் உள்ளதால் ஒரு இந்தி திரைப்பட நடிகரை வில்லனாக நடிக்க வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த வேடத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன்தான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்