இயக்குனர் ராம் இயக்கிய தங்க மீன்கள் மற்றும் பேரன்பு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது வரை சென்றவர் சாதனா. கடைசியாக அவர் பேரன்பு படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் படிப்பில் கவனம் செலுத்திய அவர் இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டார். பட்டுப்புடவையில் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.