நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்துக்குப் பின்னர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த தங்கலான் படம் நேற்று முன்தினம் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது.
ஆனாலும் படம் நேற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்நிலையில் முதல் நாளில் இந்த படம் 26 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. படத்தின் ஒலி வடிவமைப்பு ரசிகர்களுக்குப் புரியாத வகையில் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. படத்தில் பல இடங்களில் வசனங்கள் சரியாகக் கேட்கவில்லை என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதையடுத்து சரிசெய்யப்பட்ட ஒலிக்கோர்வை தற்போது தியேட்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் இந்த பிரச்சனை சரிசெய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.