விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜை நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டுள்ளதாகவும், பூஜை சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் எதையும் வெளியிட வேண்டாம் என விஜய் கண்டீஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.