தளபதி 66: விஜய் - ராஷ்மிகா ஷூட்டிங் புகைப்படங்கள் லீக்!!!

திங்கள், 13 ஜூன் 2022 (15:29 IST)
நடிகர் விஜய் நடித்து வரும் காட்சிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகியுள்ளது. 

 
விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்து, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பின்னர் மீண்டும் ஹைதராபாத்தில் ஷுட்டிங் நடைபெற உள்ளது. 
 
மேலும் தளபதி 66 படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபப்டுகிறது. இன்னும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகாத நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஐ முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் காட்சிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகியுள்ளது. ஆம், நடிகர் விஜய் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்