தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.
இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் கல்லூரி காலத்தில் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ ஒன்றை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.