'தளபதி 67’ படத்தின் மாஸ் டைட்டில் இதுதான்.. செம வீடியோ ரிலீஸ்
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (17:09 IST)
தளபதி விஜய் நடித்து வரும் 67வது படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக் குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ மாஸ் ஆக வைரல் ஆகி வருகிறது. இந்த படத்திற்கு லியோ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
இரண்டு நிமிடங்களுக்கும் மேலான இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.