இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்து திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படம் ரிலீசாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தலைவி படத்தின் தமிழ் பதிப்பிற்கு சென்சார் அதிகாரிகள் யூ சான்றிதழ் அளித்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பிற்கான சென்சார் தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது