ஸோம்பி ரெட்டி டீமின் அடுத்த அதிரடி! – தெலுங்கில் முதல் சூப்பர்ஹீரோ படம்!

செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:42 IST)
தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ஸோம்பி ரெட்ட் படக்குழுவின் அடுத்த அதிரடியாக சூப்பர்ஹீரோ படம் ஒன்று தயாராகி வருகிறது.

தெலுங்கு சினிமா இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜா நடித்து வெளியாகி இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த திரைப்படம் ஸோம்பி ரெட்டி. அதை தொடர்ந்து பிரசாந்த் வர்மா குழு முதன்முறையாக தெலுங்கில் ஒரு சூப்பர்ஹீரோ கதையை தயாரித்துள்ளனர்.

ஹனுமான் என்ற இந்த படத்தில் ஸோம்பி ரெட்டியில் நடித்த தேஜா சஜாவே நடித்துள்ளார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் பிராந்திய மொழி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்