நடிகராக மாறிய ‘தமிழ்ப்படம்’ தயாரிப்பாளர்

செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (20:11 IST)
‘தமிழ்ப்படம்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த சஷிகாந்த், நடிகராகியுள்ளார்.

 
மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்ப்படம்’ மூலம் தயாரிப்பாளரானவர் சஷிகாந்த். இவருடைய ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம், பல படங்களைத் தயாரித்துள்ளது. சமீப காலங்களில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘இறுதிச்சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’ படங்களைத் தயாரித்தவர் இவர்தான்.
 
தற்போது ‘தமிழ்ப்படம் 2.0’ படத்தைத் தயாரித்துவரும் சஷிகாந்த், இந்தப் படத்தில் நடித்தும் இருக்கிறார். இந்தத் தகவலை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்