அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகை ஒருவர் இணைந்து உள்ளதாகவும் அமெரிக்க இராணுவத்தில் இணைந்த தமிழ் முதல் தமிழ் நடிகை இவர்தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான காதம்பரி என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அகிலா நாராயணன். அமெரிக்க வாழ் தமிழரான இவர் அமெரிக்காவில் தான் பெற்றோருடன் பல ஆண்டுகள் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்து உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை அகிலா நாராயணனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.