தெலுங்கு, தமிழ் , இந்தி, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவரும் இப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. நெருப்பு நீர் என வித்யாசமான கான்செப்டில் வெளியான இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை தமன்னா இல்லையா?என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில் அதற்கான விடையை கூறியுள்ளார் இயக்குனர் ராஜமௌலி. அது குறித்து விளக்கமாக பேசிய அவர், "ஆர் ஆர் ஆர்" படத்தில், தமன்னாவுக்காக ஒரு சண்டை காட்சியை வைத்து இருக்கிறோம். இந்த சண்டை காட்சி தமன்னா படத்தில் நடிக்கவேண்டும் எனபதற்காக திணிக்கப்படவில்லை. படத்தின் கதையில் இப்படி ஒரு காட்சி வருகிறது” என்று அழுத்தமாக கூறியுள்ளனர்.