தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. அண்மையில், இவரது நடிப்பில் பெட்ரோமாக்ஸ் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளில் தன்னால் முடிந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை தக்கவைத்து வருகிறார்.
அதற்கு சற்றும் யோசிக்காமல் சடாலென்று பதிலளித்த தமன்னா, மீடூ புகார் கூறும் நடிகைளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதில்லை. நான் வேலை செய்த இடங்களில் இதுவரை பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததில்லை. யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். அப்படி ஒரு அனுபவம் எனக்கு இல்லாமல் போனது என்னுடைய அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். ஆனால், பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்ட பெண்கள் துணிச்சலாகப் பேசியது நல்லது. இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவது தான் வருத்தமானது என கூறினார்.