ஜெனிலியாவின் கணவருடன் நடிக்கும் தமன்னா !

திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (18:22 IST)
ஜெனிலியாவின் கணவருடன் ஜோடி சேரவுள்ளார் பிரபல நடிகை தமன்னா.

தமிழ் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி படத்தில் நாயகியாக அறிமுகன் ஆனவர் தமன்னா.

இவர் விஜய், சூர்யா,கார்த்திக், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஜெனிலியாவின் கணவரும் பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நெட்பிளிக்ஸுக்காக உருவாகும் இப்படத்தில் பூனம் தில்லான, குஷா கபிலா ஆகியோர் நடிக்கவுள்ளனர். சஷாங்கர் கோஷ் இயக்கவுள்ளார். இப்படம் காமெடி ரொமாமாஸ் ஆக உருவாகவுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்