சாண்டி நடிகை காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையேயும் நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதையடுத்து சாண்டி சில்வியா என்ற பெண்ணை மீண்டும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார்.
லாலா அப்பாவிற்கு ஈடாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பிரபலமானவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது சாண்டி - சில்வியா தம்பதி தங்களது திருமண நாளை கொண்டாடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளனர். மொட்டை மாடியில் டெகரேஷன் செய்து கணவருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த சில்வியாவின் காதலில் சாண்டி உணர்ச்சிவசப்பட்டு உருகிய வீடியோ இதோ..