மாஸ்டர் பட ரொமேண்டிக் நம்பர்: Andha Kanna Paathaakaa... லிரிகல் வீடியோ அவுட்!!

திங்கள், 23 மார்ச் 2020 (11:47 IST)
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள அந்த கண்ண பாத்தாக்கா... எனும் பாடலின் லிரிகல் வீடியோ வெளியாகியுள்ளது. 
 
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். 
 
இந்நிலையில் இந்த படத்தில் படத்தில் இடம்பெற்றுள்ள அந்த கண்ண பாத்தாக்கா... எனும் பாடலின் லிரிகல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் ஒரு ரொமேண்டிக் நம்பராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் எழுதி, யுவன் சங்கர ராஜா பாடியுள்ளது இந்த பாடலின் லிரிகல் இதோ... 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்