மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர், ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன.
அந்த வகையில் இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார். இப்படத்தில் , யோகிபாபு, பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவுடன் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க அவரின் உதவியாளர்கள் சபரி சரவணன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.
லாஸ்லியா நடித்துள்ள இப்படத்துக்கு கூகுள் குட்டப்பா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.#googlekutappan
இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரே தயாரித்துள்ள நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று, சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இப்போஸ்டர் வைரலாகி வருகிறது.