லாஸ்லியாவின் படத்தை வெளியிடும் சூர்யா - வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைக்கும்!

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:58 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா என்பதும் அவர் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பதும் தெரிந்ததே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஹர்பஜன் சிங் நடித்து முடித்துள்ள ’பிரண்ட்ஷிப்’ உள்பட மூன்று படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் இந்த மூன்று படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் லாஸ்லியா "கூகுள் குட்டப்பா" என்ற புதிய படமொன்றில் நடத்து வருகிறார். சபரி-சரவணன் இயக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் தர்ஷன், யோகி பாபு மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று 6 மணிக்கு வெளியிடுகிறார். இதனால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் கவனம் அதிகரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்