சூர்யாவின் ‘ஜெய்பீம்’: 1993ல் நடைபெறும் கதையா?

வியாழன், 29 ஜூலை 2021 (20:27 IST)
சூர்யாவின் ‘ஜெய்பீம்’: 1993ல் நடைபெறும் கதையா?
சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே 
 
பத்திரிக்கையாளர் ஞானவேல் என்பவர் இயக்கி வரும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி  இந்த படம் கடந்த 1993-ஆம் ஆண்டு நடந்த நிஜ சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப் பட்டது என்றும் 1993ஆம் ஆண்டு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடி நீதி பெற்றுத் தரும் சந்துரு என்ற வழக்கறிஞர் கேரக்டரில் சூர்யா நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
நிஜமாகவே சீனியர் வழக்கறிஞர் ஒருவர் தான் சந்தித்த இந்த வழக்கின் அடிப்படையில் தான் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த தகவல் காரணமாக தற்போது இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவில்லை என்றும் அவர் தான் கதையின் நாயகன் என்றும் இயக்குனர் ஞானவேல் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்