சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (23:32 IST)
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு ஃபெப்சி ஸ்டிரைக் காரணமாக இடையில் தடைபட்டாலும் தற்போது முழு வீச்சில் கடைசிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 30 அல்லது 35 நாட்களில் முற்றிலும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இணையதளங்களில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பொங்கல்க்கு சேர்ந்து சேர்றோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா மற்றும் கார்த்திக் நடித்து வரும் இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்