எடுபிடியான நடிகர் பரத்?

வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (20:35 IST)
நடிகர் பரத் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் நடித்த காதல் திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் அங்கீகாரத்தை கொடுத்தது.


 
 
அதன பின்னர் ஆக்சன் படங்களில் நடிக்க துவங்கினார். அது அவருக்கு கைடுக்காததால் சில ஆண்டுகள் படமின்றி இருந்தார்.
 
எனவே, கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். பொட்டு, கடைசி பென்ஞ் கார்த்தி என்னும் இரு படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் நடிகர் பரத், எஸ்.ஜே.சூர்யாவின் அடியாளாக நடித்துள்ளார்.
 
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இந்தப் படத்தில் நடிக்க, மெயின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். பரத், எஸ்.ஜே.சூர்யாவின் அடியாளாக நடித்துள்ளாராம். 
 
எஸ்.ஜே.சூர்யா திட்டம் தீட்ட அதனை செயல் படுத்தும் ஒருவராக பரத் ஸ்பைடர் படத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்