இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. சென்னை ஈசிஆர் அருகே ஜல்லிக்கட்டு வாடிவாசல் போன்ற செட் போடப்பட்டு அதில் இந்த ஒத்திகை படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் வெற்றிமாறன் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.