சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துடன் மோதுகிறதா ‘யானை’?

சனி, 20 நவம்பர் 2021 (17:46 IST)
சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு வெற்றி படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆனதை அடுத்து திரையரங்கில் வெளியாக இருக்கும் படம் எதற்கும் துணிந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் சூர்யாவின் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகிறதோ அப்போதுதான் தனது ’யானை’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக இயக்குனர் ஹரியின் வட்டாரங்கள் கூறியது
 
இந்த நிலையில் இன்று ’யானை’ படத்தின் ஹீரோ அருண் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் படப்பிடிப்புக் குழுவினர்களால் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துடன் யானை படம் மோதுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர்கள் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்