’சூர்யா 42’ படத்தின் புதிய போஸ்டர்.. படக்குழுவினர் ரிலீஸ்..!

செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (17:20 IST)
சூர்யா நடித்து வரும் 42 வது திரைப்படம் ஆன சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சற்று முன் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் சூர்யா குதிரையில் உட்கார்ந்து இருப்பது போன்றும் ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு அந்த குதிரை தாவுவதற்கு தயாராக இருப்பது போன்றும் அந்த குதிரைக்கு அடியில் ஒரு நாய் இருப்பது போன்றும் உள்ளது.
 
இந்த காட்சி உண்மையில் இதே மாதிரி படமாக்கப்பட்டு இருந்தால் திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களுக்கு வேற லெவல் உணர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படம் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வருகிறது. 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்