ஏப்ரலில் தொடங்கும் சூர்யாவின் அடுத்த படம்… இயக்குனர் இவர்தான்!

வியாழன், 5 ஜனவரி 2023 (09:43 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இப்போது இருந்து வருகிறார் சுதா கொங்கரா.

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர்.

இதையடுத்து சூரரைப் போற்று திரைப்படக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அடுத்த படம் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்