சூர்யா 42 ஷூட்டிங் நிறுத்தம்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்பியை பார்க்க சென்ற சிறுத்தை சிவா!

புதன், 8 மார்ச் 2023 (10:06 IST)
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பார்க்க செல்வதற்காக ஷூட்டிங்கை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் பாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலா தமிழில் வீரம் உள்ளிட்ட படங்களிலும் மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்