சூப்பர் ஸ்டாரின் ''காட்பாதர் ''பட சென்சார் தகவல்?

வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:56 IST)
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் லூசிபர் படம் தெலுங்கில் ‘’காட்பாதர்’என்ற பெயரில் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததுள்ளது.

இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்  சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஜூலை 4 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி  வரவேற்பை பெற்ற நிலையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு    காட்பாதர் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.


ALSO READ: சூப்பர் ஸ்டாரின் ''காட்பாதர் ''பட டீசர் புதிய சாதனை!

இந்த  நிலையில்,  காட்பாதர் படத்தின் எடிட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், இதுவரை வெளியான சூப்பர் ஸ்டார் படங்களில் இப்படம் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும், இப்படம் சிரஞ்சீவிக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தற்போது, இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாகவும், இது காட்பாதர் படத்தின் வெற்றிக்கு உதவும் எனக் கூறப்படுகிறது.   ஆனால். படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை,.


சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சமீபத்திய படங்கள் எதுவும் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், இப்படம் நிச்சயம் சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 15 ல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

It’s a Clean U/A with an amazing appreciation from the Censor authorities
Waiting for the audience blessing on #GodFatherOnOct5th

— Mohan Raja (@jayam_mohanraja) September 23, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்