இப்படத்தில் சல்மான் கான் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஜூலை 4 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், படக்குழுவினர் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்தப்படி மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காட்பாதர் டீசர் வெளியானது.
இந்த டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், படமும் ஹிட் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், காட்பாதர் படத்தின் எடிட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், இதுவரை வெளியான சூப்பர் ஸ்டார் படங்களில் இப்படம் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும், இப்படம் சிரஞ்சீவிக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.