இன்று நடைபெற்ற ஷூட்டிங்கின் போது, பிரபல நடிகர் பிரபாஸின் சவாலை ஏற்று சூப்பர் ஸ்டார் மரக்கன்று நட்டார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்க உள்ளார். அதேபோல் ராஷிகண்ணாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் உள்ள பிலிம்சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் பிரபாஸ், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்தாண்டு கொரொனா ஊரடங்கில் ஷூட்டிங் இல்லாத போது, நடிகர் மகேஷ் பாபு விஜய்க்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்தார். இதையேற்று விஜய், த்ரிஷா, உள்ளிட்ட நடிகைகள் மரக்கன்றுகள் நட்டனர்.